குருவாயூர் கோவில் தங்கம் 600 கிலோ : பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட்

குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக

வழங்கும் தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியில் கோவில் நிர்வாகம் டெபாசிட் செய்து வருவது குறித்த விரிவான அறிக்கை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, இக்கோவிலுக்கு வரும், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களையும், வெளிநாடுகளையும் சேர்ந்த பக்தர்கள் தங்கம், வெள்ளி உட்பட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும், தங்கப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அவை கோவில் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். அதன்பின், மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க, வெள்ளிப் பொருட்களை உருக்கி, கட்டிகளாக மாற்றும் மையத்திற்கு அனுப்பப்படும். அங்கு அவைகள் உருக்கப்பட்டு, கட்டிகளாக மாற்றப்பட்டு.பின்னர் பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட்டாக வைக்கப்படும்.இவ்வாறு சில மாதங்களில் பக்தர்களால் கோவிலுக்கு கிடைக்கப்பெற்ற, 57 கிலோ தங்கம், குருவாயூர் தேவஸ்வம் போர்டால் சேகரிக்கப்பட்டு வந்தது. இவை சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் முறைப்படி டெபாசிட் செய்யப்பட்டது. இத்தங்க டெபாசிட்டிற்கு வங்கி மூலம், ஒரு சதவீத வட்டி வழங்கப்படும். இதற்கு முன், இரு தவணைகளில் கோவில் சார்பாக, 550 கிலோ தங்கம் இதே வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்தான விரிவான அறிக்கையை கோவில் நிர்வாக கமிட்டி தயாரித்தது. அவ்வறிக்கையை நேற்று முன்தினம் கோவில் சார்பாக கேரள ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *