ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டத்துறை பறிப்பு!

posted in: அரசியல் | 0

டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தமிழக காங்கிரஸ் எம்பியான ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரயில்வே அமைச்சராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்துறை அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லியிடம் இருந்து அந்தத் துறை பறிக்கபடுகிறது. இந்தத் துறை, சல்மான் குர்ஷித் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக்கப்படவுள்ளார்.

வீரப்ப மொய்லிக்கு கம்பெனிகள் விவகாரத்துறை ஒதுக்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகவுள்ளது.

இதில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந் நிலையில் புதிய அமைச்சர்கள் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே அமைச்சராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தர்போது அவர் சுகாதாரத் துறை இணை அமைச்சராக உள்ளார். அதேபோல அக்கட்சியைச் சேர்ந்த சுதீப் பந்தோபத்யாய் இணை அமைச்சராக்கப்படலாம்.

சட்டத்துறை அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லியிடம் இருந்து அந்தத் துறை பறிக்கபடுகிறது. இந்தத் துறை, சல்மான் குர்ஷித் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதுவரை குர்ஷித் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக்கப்படவுள்ளார். வீரப்ப மொய்லிக்கு கம்பெனிகள் விவகாரத்துறை ஒதுக்கப்படுகிறது.

விலாஷ் ராவ் தேஷ்முக்கிடம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வழங்கப்படவுள்ளது. இவர் இதுவரை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்தார்.

அதே போல நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத்தின் இலாகாவும் மாற்றப்படும் என்று தெரிகிறது.

எம்.எஸ்.கில், ஹண்டிக், காந்திலால் பூரியா ஆகிய அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோராவுக்கு பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. முரளி தியோரா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

திமுக சார்பில் புதிதாக 2 பேரை சேர்க்க வேண்டியுள்ளது. அவர்கள் யார் என்பதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. ஒருவேளை திமுக அமைச்சரவையில் 2 பேரை சேர்க்க விரும்பினால், திமுக கூறும் நபர்களை சேர்க்க காங்கிரஸ் ஒத்துக் கொண்டால், டி.ஆர்.பாலு மற்றும் டிகேஎஸ் இளங்கோவன் அமைச்சர்களாகலாம் என்று தெரிகிறது.

நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு கேபினட் அந்தஸ்து தரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய அமைச்சரவை மாற்றம் சற்றே விரிவானதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெல்லியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மாலை 5 மணியளவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *