சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று விலை குறைவு காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை இன்று சிறிதளவு குறைந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் நிம்மதி அலையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.160ம், பார் வெள்ளி விலை ரூ.1605ம் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2166 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.23170 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.17328க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.62.55 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.58470 ஆகவும் உள்ளது.
Leave a Reply