பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்திருக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 24ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதே முறையில் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.
மொத்தமுள்ள சேர்க்கை இடங்களில் 52 இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதற்காக 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா கலையரங்கில் ஜுலை 24ம் தேதி நடைபெற உள்ளது.
காலை 10,30 மணிக்கு கலந்தாய்வு துவங்குகிறது. முதல் பிரிவாக தென்மண்டலம், அடுத்து வடமண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம் என நான்கு பிரிவுகளாக நடத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மேலும் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply