தமிழ் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பொழுதுபோக்கு துறையில் ஆதிக்கம்
செலுத்தி வரும் முக்கிய நிறுவனமான யுடிவி-யை ரூ.2014 கோடிக்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு நிறுவனங்களில் யுடிவி., நிறுவனமும் ஒன்று. பாலிவுட், கோலிவுட் உள்ளிட்ட ஏராளமான மொழி படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்த நிறுவனத்தின் 50.44 பங்குகளை வைத்திருக்கும் வால்ட் டிஸ்னி நிறுவனம், இப்போது மீதமுள்ள பங்குகளையும் ரூ.1000 வீதம் வாங்க முடிவு செய்து ஒப்பந்தமும் கையழுத்தானது. மேலும் யுடிவியின் புரமோட்டர்களான ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசமுள்ள பங்குகளையும் சேர்த்து வாங்கிக் கொள்கிறது டிஸ்னி. இதன் மூலம் புதிதாக 454 மில்லியன் டாலர், அதாவது ரூ.2014 கோடியை முதலீடு செய்கிறது வால்ட் டிஸ்னி. பாலிவுட் மட்டுமல்லாது சமீபத்தில் கோலிவுட்டிலும் கால்பதித்தது யுடிவி. இப்போது இந்த நிறுவனம் டிஸ்னி வசம் செல்வது, தமிழ் சினிமாவின் தரம் மேலும் உயர வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Leave a Reply