ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மதிப்பீட்டு முறையில், புதிய நடைமுறையை பின்பற்ற, தொடக்கக் கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி அட்டை (புராக்ரஸ் கார்டு) முறை, கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இந்த கல்வி ஆண்டு முதல், மாணவர்கள் கற்றல் அடைவு அறிக்கை (ரிப்போர்ட்டிங் கார்டு) மற்றும் மாணவர்கள் தர மதிப்பீட்டு பதிவு தாள் (ரிக்கார்டிங் கார்டு) முறையில் மதிப்பீடு செய்ய, தொடக்கக் கல்வி துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் 2007-08 ல், 16 பள்ளிகளில், இந்த புதிய மதிப்பீட்டு முறை சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது.
ஆய்வின் அடிப்படையில், சில திருத்தங்கள் செய்யப்பட்டு, புதிதாக இந்த கல்வி ஆண்டு முதல் மதுரை, திண்டுக்கல், தஞ்சை, நெல்லை, நீலகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave a Reply