வாஷிங்டன்: “அமெரிக்கா என்றும், எப்போதும் எந்த ஒரு மதத்திற்கு எதிராகவும்
போரில் ஈடுபடாது’ என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு சம்பவத்தின் 10 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தலைநகர் வாஷிங்டனில் உள்ள கென்னடி மையத்தில் நேற்று அவர் பேசியதாவது: பல இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து வாழக் கூடிய நாடாக இன்றும் அமெரிக்கா தான் திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்கர்கள் முன்பை விட ஒற்றுமையை மேலும் உறுதியாக்கியுள்ளனர். இரட்டைக் கோபுரத் தகர்ப்பு சம்பவத்திற்குப் பின், அப்போதைய அதிபர் புஷ் சொன்னதையே மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன். அமெரிக்கா இஸ்லாம் அல்லது எந்த ஒரு மதத்திற்கும் எதிராகப் போர் தொடுக்காது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வரலாம். இவ்வாறு ஒபாமா பேசினார்.
Leave a Reply