அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால்தங்கத்தின் விலை மேலும் குறையுமா?

மும்பை:கடந்த ஒரு சில வாரங்களாக, உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும், மதிப்பு மிகு உலோகமான தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

இதற்கான காரணம் என்ன? இதன் விலை மேலும் குறையுமா? என்பதே இன்று பல முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுவாக நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும், திருமண காலங்களிலும், தங்கத்தின் விலை உயரும். ஆனால், கடந்த ஒரு சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இதற்கு, கடந்த ஒரு சில வாரங்களாக இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதுதான் முக்கிய காரணம் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். நடப்பு ஆண்டு பண்டிகை காலத்தில் 100 -150 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்ற வார மத்தியில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 47 ரூபாயிலிருந்து, 50 ரூபாய் வரை சென்றது. இதனால், இறக்குமதி செலவினம் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, வர்த்தகர்கள் தங்கம் இறக்குமதி செய்வதை மிகவும் குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்தின் போது, 90 டன் தங்கம் இறக்குமதி செய்து கொள்ளப்பட்டதாக, மும்பை தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டார்.மேலும், தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்ததால், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு இது எட்டாக் கனியாகப் போனது. இதனால், தங்கத்திற்கான தேவையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருவதால், பல முதலீட்டாளர்கள், இதன் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்போடு தங்க நகை வாங்குவதை ஒத்திப் போட்டு வருகின்றனர் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதற்கு எடுத்துக்காட்டாக, மும்பை சந்தையில், சென்ற புதன்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை, 26 ஆயிரத்து, 940 ரூபாயாக குறைந்திருந்தது. சர்வதேச சந்தையிலும், அன்றைய தினம் இதன் விலை மிகவும் சரிவடைந்திருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நேற்று, 10 கிராம் தங்கத்தின் விலை 500 ரூபாயய்குறைந்து, 25 ஆயிரத்து, 820 ரூபாயாக இருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,700 ரூபாயய்குறைந்து, 50 ஆயிரத்து, 900 ரூபாயாக சரிவடைந்தது.சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 308 ரூபாயய்குறைந்து, 19 ஆயிரத்து, 912 ரூபாயாக குறைந்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம், ஸ்டாண்டர்டு அண்டு புவர் (எஸ் அண்டு பி) நிறுவனம், அமெரிக்காவின் கடன் தரக்குறியீட்டை குறைத்தது. ஐரோப்பாவில், ஒரு சில நாடுகள் கடன் சுமையால் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதார சுணக்க நிலையால், தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து போயுள்ளது.உலகளவில் தங்கத்தை அதிக அளவில் பயன்படுத்தும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. உலக தங்க கவுன்சில், இந்திய குடும்பங்களில் 18 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இதன் மதிப்பு, இன்றைய விலையில், 1 லட்சத்து, 10 ஆயிரம் கோடி டாலர் (53 லட்சம் கோடி ரூபாய்)ஆகும். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜி.டீ.பி) 70 சதவீதமாகும்.கடந்த நான்கு ஆண்டுகளில், தங்கத்தில் மேற்கொண்ட முதலீட்டிற்கு சராசரியாக 20 சதவீதத்திற்கும் அதிகமாக ஆதாயம் கிடைத்துள்ளது. இதன் காரணமாகத்தான் இந்திய மக்கள்,தங்கத்தில் முதலீடு செய்வதை மிகவும் விரும்புகின்றனர். பொதுவாக, நாடு தழுவிய அளவில், ஒரு ஆண்டில், 10 லட்சத்திற்கும் அதிகமாக திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில், அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள், அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான ஐந்து மாதங்களில் தான் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.எனவே வரும் தீபாவளி, உள்ளிட்ட பண்டிகை காலங்கள் மற்றும் திருமண காலங்களை முன்னிட்டு, தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள் வாங்குவது அதிகரிக்கக்கூடும். இருப்பினும், 10 கிராம் தங்கத்தின் விலை, 25 ஆயிரம் ரூபாயய்முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை நிலையாக இருந்தால், அது தற்போதைய பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக வாங்குபவர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் என, மும்பை தங்கம் மற்றும் வெள்ளி உலோக விற்பனையாளர்கள் சங்கத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒட்டு மொத்த அளவில், வரும் பண்டிகை மற்றும் திருமண காலத்தில், இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் விற்பனை, சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு, எதிராக இந்திய ரூபாயின் மதிப்புமீண்டும் வ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *