ஆனால் அக்டோபர் 17ம் தேதி மற்றும் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதால், திருச்சி இடைத்தேர்தல் முடிவு உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே திருச்சி வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து பிரவீன் குமார் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு வருவதால், திருச்சி மேற்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே அதை ஏற்று வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து அக்டோபர் 20ம் தேதிக்கு வாக்கு எண்ணிக்கை தள்ளிப் போகும் என்று தெரிகிறது.
பிரவீன் குமார் மேலும் கூறுகையில், திருச்சி மேற்குத் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளுமே பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே 5 கம்பெனி துணை ராணுவப் படையை பாதுகாப்புக்குக் கோரியுள்ளோம். அதில் 2 கம்பெனி படையினர் வந்து விட்டனர். வாக்குப் பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன என்றார்.
Leave a Reply