பி.டி.எஸ். படிப்பில் 103 இடங்கள் காலி

posted in: கல்வி | 0

சென்னை: மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கின் முடிவில், பி.டி.எஸ். படிப்பில், 103 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக, 847 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இவற்றில் காலியாக இருந்த இடங்களை நிரப்ப, கடந்த 5ம் தேதி முதல் செப்டம்பர் 12 வரை, மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடந்தது.

இதன் முடிவில், 103 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. &’இந்த இடங்களை நிரப்ப, அடுத்தகட்ட கவுன்சிலிங், இம்மாத இறுதிக்குள் நடத்தப்படும்&’ என கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குனர் ஷீலா தெரிவித்தார்.

எனவே இப்படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள், இம்மாத இறுதியில் நடக்கும் 4 ம் கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *