மூன்று மயில்களுடன் கூடிய கவர்ச்சிகரமான, 10 ரூபாய் நோட்டுகளை வாங்க, நாடு முழுவதும் உள்ள, ரூபாய் நோட்டு சேகரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுபோன்ற, மூன்று மயில்கள் படம் பொறித்த, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஆர்.என்.மல்கோத்ரா கையெழுத்துடன் கூடிய நோட்டுகள் இருந்தால், அதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரப்படும் என, ஆன்-லைன் ஏல மற்றும் ஷாப்பிங் வெப்சைட்டான, இ-பே அறிவித்துள்ளது. அதே நேரத்தில், விதவிதமான நோட்டுகளை சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளவர், இந்த வகை நோட்டு ஒன்றைக் கொடுத்தால், 50 ஆயிரம் ரூபாய் தரவும் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டு மயில்களுடன் கூடிய, பல வண்ணங்களைக் கொண்ட, ரூபாய் நோட்டுகள், 1973 மார்ச் 24ம் தேதி, அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.ஜெகந்நாதனின் கையெழுத்தோடு வெளியிடப்பட்டது. அதன்பின், 20 ஆண்டுகள் கழித்து, மயில்கள் இல்லாத, புதிய வடிவத்திலான, பத்து ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த நோட்டுகளில், காஷ்மீரின் புகழ் பெற்ற ஷாலிமர் கார்டன் இடம் பெற்றிருந்தது. இந்த வகை நோட்டுகள், 1992 ஜனவரி முதல் தேதி வெளியிடப்பட்டன. விதவிதமான ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவோர், மயில்களுடன் கூடிய, 10 ரூபாய் நோட்டுகளை வாங்க ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி, ஆறாம் ஜார்ஜ் படம் பொறித்த, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் கழுகு படம் பொறித்த, 100 ரூபாய் நோட்டுகளையும் வாங்க, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Leave a Reply