2,130 மாணவர்களுக்கு இன்று இலவச “லேப்-டாப்’ கிடைக்கும்

posted in: மற்றவை | 0

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 படிக்கும், 2,130 மாணவ, மாணவியருக்கு, இன்று அரசின் இலவச, “லேப்-டாப்’ வழங்கப்படுகிறது.


சென்னை, திருச்சி, மதுரை, கரூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், “லேப்- டாப்’ வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா, திருவள்ளூரில் இன்று நடக்கிறது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, “லேப்- டாப்’ வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும், 2,130 மாணவ, மாணவியருக்கு, “லேப்- டாப்’ வழங்கப்படுகிறது.
மாவட்ட வாரியாக இன்று வழங்கப்படவுள்ள, “லேப்-டாப்’ விவரம்:திருநெல்வேலி – 128, தூத்துக்குடி – 100, கன்னியாகுமரி – 140, திருவள்ளூர் – 119, காஞ்சிபுரம்-173, கோவை – 127, நீலகிரி – 48, திருப்பூர் – 158, ஈரோடு – 177, பெரம்பலூர் – 74, சேலம் – 74, திருவண்ணாமலை – 177, விருதுநகர் – 40, தஞ்சாவூர் – 67, திருவாரூர் – 48, சிவகங்கை – 26, அரியலூர் – 23, கடலூர் – 55, விழுப்புரம் – 34, வேலூர் – 110, தர்மபுரி – 55, நாமக்கல் – 43, கிருஷ்ணகிரி- 34, திண்டுக்கல் – 52, தேனி – 48.சென்னை , கரூர், ராமநாதபுரம், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில், லேப்-டாப் வழங்குவ தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. “தனியார் நிறுவனங்களிடமிருந்து, தேவையான, “லேப்-டாப்கள்’ கிடைத்ததும், இந்த மாவட்டங்களில் வழங்கப்படும்’ என, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *