அல்கய்டா இயக்கத்தின் முக்கியத் தளபதி அன்வர் அல் அவ்லகி அமெரிக்காவின் ராக்கெட் தாக்குதலில் பலியானதைத் தொடர்ந்து, அல்காய்தாவின் பழிவாங்கல் தாக்குதல் நடவடிக்கைகள் அமெரிக்காவில் நிகழலாம் என உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
இதைத் தொடர்ந்து நியூயார்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க் காவல்துறை ஆணையர் ரேமண்ட் கெல்லி, இது குறித்துக் கூறுகையில், அவ்லகிக்கு ஏராளமான அனுதாபிகள் அமெரிக்காவில், குறிப்பாக நியூயார்க் நகரில் இருக்கிறார்கள்.
இந்தக் காரணத்தால், அவருடைய கொலையைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்களால் பழிவாங்கல் நடவடிக்கைகள் இங்கே மேற்கொள்ளப்படலாம் என்றார்.
Leave a Reply