கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 1 ஆம் தேதியன்று (இன்று) நடைபெறும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார். இந்நிலையில்,இன்று ஜாமீன் மனு மீதான இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் சிபிஐ வழக்கறிஞர் ஆகிய இருவருமே விசாரணையை வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வருகிற 15 ஆம் தேதி இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஓ.பி.சைனி, அதன்பின்னர், 17 ஆம் தேதி கனிமொழி, மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.
Leave a Reply