சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அதை சீரமைத்த சகாயம், வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கிஸ் சுங்கத் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சகாயம்: கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனரான யு.சகாயம், இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
தேவ் ராஜ தேவ்: மாநில மனித உரிமைகள் ஆணைய முன்னாள் செயலாளர் தேவ் ராஜ் தேவ், ஒழுங்குமுறை நடவடிக்கை ஆணைய கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
சி.சகாய மூர்த்தி: ஊரக வளர்ச்சி மற்றும் கிராம பஞ்சாயத்து துறை இணை செயலாளர் சி.சகாய மூர்த்தி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
எம்.வீர சண்முக மணி: தொழிலாளர் துறை கமிஷனர் எம்.வீர சண்முக மணி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
ராஜேஷ் லக்கானி: எரிசக்தித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், எரிசக்தித் துறை செயலாளர் பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.
அபூர்வா: இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி கமிஷனர் அபூர்வா, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
ஜெக்மோகன் சிங் ராஜூ: சிறு தொழில் வளர்ச்சி கழகம் நிர்வாக இயக்குனராக ஜெக்மோகன் சிங் ராஜூ நியமிக்கப்படுகிறார்.
கே.நாகராஜன்: சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை இணை செயலாளர் கே.நாகராஜன், தமிழ்நாடு கிடங்கு கழக நிர்வாக இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
வி.அமுதவள்ளி: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர் வி.அமுதவள்ளி, தமிழ்நாடு சிறுதொழில் கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
Leave a Reply