இதற்காக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்-களை இந்தியா முழுவதும் நிறுவத் திட்டமிட்டு உள்ளது. பெட்ரோல், டீசல், எல்பிஐ ஆகியவற்றில் வர்த்தகம் செய்து வந்த இந்தியன் ஆயில் இனி எலக்ட்ரிக் வாகனங்கள் வர்த்தகத்திலும் இறங்க உள்ளதாக இந்தியன் ஆயில் தலைவர் எஸ்எம் வைத்தியா தெரிவித்துள்ளார்.

3 வருட இலக்கு
இத்திட்டத்தின் படி அடுத்த 12 மாதத்தில் 2000 சார்ஜிங் ஸ்டேஷன், இந்த 2000 சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் அனுபவத்தை வைத்து பணிகளை எளிதான முறையில் திட்டமிட்டு அடுத்த 2 வருடத்தில் 8000 சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இப்படி அடுத்த 3 வருடத்தில் நாடு முழுவதும் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க உள்ளதாக எஸ்எம் வைத்தியா தெரிவித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
இந்தியன் ஆயில் போலவே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் டாடா பவர் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணியை விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

5000 சார்ஜிங் ஸ்டேஷன்
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஜூலை 2021 நிலவரத்தின் படி 100 நகரங்களில் 500 சார்ஜிங் ஸ்டேஷன்கள் வைத்திருந்த நிலையில் அக்டோபர் மாதம் 1000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்துச் சாதனை படைத்தது. இந்நிலையில் டாடா பவர் உடனான இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த 4 வருடத்தில் 5000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இரு நிறுவனங்கள்
இப்படி நாட்டின் இரு முன்னணி இரு எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளதால், அடுத்த ஒரு வருடத்திற்குள் கைக்கு எட்டும் தூரத்தில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கும். இதனால் மக்கள் இனி எலக்ட்ரிக் வாகனங்களை எவ்விதமான கவலையும் இல்லாமல் வாங்க முடியும்.

சப்ளை டிமாண்ட் பிரச்சனை
இதுமட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான வரி சலுகையும் உண்டு என்பதால் மக்களுக்கு அனைத்து விதத்திலும் லாபமே. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் மின்சார உற்பத்தியும் அதிகரித்தால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை இல்லாமல் மின்சாரத்தின் விலை உயராமல் இருக்கும்.
Leave a Reply