உச்சிப்புளி: பவளப்பாறை சிதைவுறுவதை தடுக்கவும், பொருளாதாரத்தை பெருக்கவும் வண்ண மீன்கள் வளர்க்கும் பயிற்சி திட்டம் துவங்கப்பட உள்ளதாக அண்ணாமலை பல்கலை., விரிவுரையாளர் டாக்டர் அஜித்குமார் கூறினார்.
உச்சிப்புளியில் நடந்த வண்ண மீன் உற்பத்தி பயிற்சி முகாமில் பங்கேற்ற அவர் பேசிகையில், “” வண்ண மீன்கள் வளர்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இங்கும் வெளிநாட்டிலும் வண்ண மீன்களுக்கு அதிக தேவை உள்ளது. வண்ணமீன்கள் அதிகம் பிடிபடுவதால் பவளப்பாறைகள் சிதைவு ஏற்படுகிறது. அதை தடுக்கும் நோக்கில் வண்ண மீன் வளர்ப்பு பயற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதன் மூலம் பவளப்பாறை பாதுகாக்கப்படுவதுடன், நாட்டின் பொருளாதாரமும் உயரும்.குறுகிய காலத்தில் ஆதாயம் கிடைக்கும் இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் அதிக வருவாய் கிடைக்கும். வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்த நேரடி பயிற்சி அண்ணாமலை பல்கலை., யில் அளிக்கப்படும். இதற்காக 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்றார். முதன்மை வன பாதுகாவலர் அருணாபாசு சர்க்கார், அண்ணாமலை பல்கலை., விரிவுரையாளர் பதுல்ஹக் உடன் இருந்தனர்.
Leave a Reply