வாஷிங்டன் : “இந்தக் குளிர் காலத்தில், பன்றிக்காய்ச்சல் நோய் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் பரவி, 20 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படலாம்; 90 ஆயிரம் பேர் பலியாகலாம்’ என, வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“அமெரிக்கா 2009-பன்றிக் காய்ச்சல் நோய்க்கான ஆயத்தம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தாண்டின் இறுதியில் ஆறு கோடி முதல் 12 கோடி வரையிலான அமெரிக்கர்களுக்கு, பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று அறிகுறிகள் போன்று தோன்றலாம். 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான அமெரிக்க மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படலாம். பன்றிக் காய்ச்சல் நோயால், 30 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை பலியாகலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள், 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பர். இவை அனைத்தும் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. பிரிட்டனுடன் ஒப்பிடும் போது, அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply