சென்னை : சென்னை கோயம்பேட்டில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயம்பேடு காய்கறி- பழங்கள் மார்க்கெட்டை சுத்தமாக பராமரிக்கவும், திடக் கழிவு மேலாண்மை செய்யவும், மற்றும் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், ஒப்பந்தப்புள்ள கோரப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை பெற ஐதராபாத்தை சேர்ந்த ராம்கி க்ரூப் நிறுவனமும், மகாராஷ்டிராவை சேர்ந்த அந்தோனி கழிவு மேலாண்மை நிறுவனமும் போட்டா போட்டியில் குதித்துள்ளன. ராம்கி நிறுவனம் ஏற்கனவே கோவை, பெங்களூரு. டில்லி, ஆமதாபாத், கோவை மற்றும் கோட்டயத்தில் திடக் கழிவு மேலாண்மை பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply