கோவை : சர்வதேச அளவில் தனக்கென இன்ஜினியரிங் சர்வீசில் தனி முத்திரை பதித்துள்ள ராபர்ட் போஸ்ச் இன்ஜினியரிங் நிறுவனம் இந்தியாவில் 170 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
கோவையில் அமையும் மையும் 3 கட்டங்களாக மேம்படுத்தப்படயிருக்கின்றன. முதல் கட்ட பணிகள் 2010ம் ஆண்டு முடிவு பெறுகிறது. இதில் 1700 பொறியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிகிறது. இத்தகவலை நிறுவனத்தின் இயக்குநர் பிரீரெடல்ஹம் பிக்சார்ட் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பெங்களூருவில் ராபர்ட் போஸ்ச் இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளது. கோவையில் அமையவிருக்கும் யூனிட்டை இயக்க பெங்களூருவை ஒப்பிடும் போது 15 சதவீதம் செலவு குறைவாகவே இருக்கும் என்றார்.
Leave a Reply