சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் பல்வேறு விருதுகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்களின் பெயர்கள் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளி்ல் சிறப்பாக விளையாடியதன் மூலம் பல்வேறு விருதுகளுக்கு நிறைய இந்திய வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று பிரிவுகளில் கேப்டன் [^] டோணியின் பெயர் போட்டியில் உள்ளது.
ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் போட்டி வீரர் ஆகிய பிரிவுகளில் டோணியின் பெயர் உள்ளது.
சிறந்த கிரிக்கெட் வீரர்…
டோணி தவிர கெளதம் கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகியோரும் இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்குப் போட்டியிடுகின்றனர்.
டெஸ்ட் வீரர்…
அதேபோல டெஸ்ட் வீரர் பிரிவில் டோணியுடன், கம்பீர், ஹர்பஜன் சிங், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரின் பெயர்களும் போட்டியில் உள்ளன.
ஒரு நாள் போட்டி வீரர்...
சிறந்த ஒரு நாள் போட்டி வீருக்கான விருதுப் பிரிவில் டோணியுடன், வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சிறந்த டுவென்டி 20 வீரர்…
சிறந்த டுவென்டி 20 வீரருக்கான போட்டியில், ஜாகிர்கான் பெயர் இடம் பெற்றுள்ளது.
சிறந்த வளரும் வீரர்…
சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் [^] வீரருக்கான விருதுப் போட்டியில் அமீத் மிஸ்ராவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் மித்தாலி ராஜ், பிரியங்கா ராய் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு டோணி சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதைப் பெற்றார். அதேபோல சிறந்த ஒரு நாள் அணியாகவும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது.
இந்த முறை ஏராளமான வீரர்களின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் இருப்பதால் 3 பிரிவுகளிலும் இந்தியாவுக்கு விருது கிடைக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள சாம்பியன்டிராபி போட்டித் தொடரின்போது விருதுகள் அறிவிக்கப்பட்டு வீரர்களுக்கு வழங்கப்படும்
Leave a Reply