பிலிப்பைன்ஸ் சூப்பர் பெர்ரி கப்பல் மூழ்கியது : 900 பேர் தப்பினர் : 60 பேர் மூழ்கினர்

posted in: உலகம் | 0

tbltopnews1_65253412724மணிலா: பிலிப்பைன்ஸ் அருகே சூப்பர் பெர்ரி- 9 என்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியது . இதில் பயணித்த 968 பேரில் தொள்ளாயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். 60 பேர் மாயமாயினர். 10 பேர் சடலங்கள் மீட்கப்பட்டாலும் பலி எண்ணிக்கை 60 ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

சாண்டோஸ் பகுதியில் இருந்து இலாய்லோ நோக்கி சூப்பர் பெர்ரி கப்பல் புறப்பட்டது. பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் உள்பட ஆயிரம் பேர் இந்தக்கப்பலில் பயணித்தனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே ஷாம்போங்கா அருகே (மணிலாவில் இருந்து 860 கி. மீட்டர் தொலைவில் ) கப்பல் திடீரென மூழ்க துவங்கியது.

தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறிய பரிதாபம்: கப்பல் மூழ்கிய நேரம் அதிகாலை என்பதால் அனைவரும் தூங்கி கொண்டிருந்ததார்கள். பயணிகள் அனைவரும் அலறி அடித்து எழும்பினர். பின்னர் அவர்கள் கப்பலில் இருந்து கடலுக்குள் குதித்து உயிரை காப்பாற்ற முயற்சித்தனர். கப்பல் மூழ்கும் செய்தி கப்பல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கப்பல் படையினர், விமான படையினர், வர்த்தக கப்பல் , மற்றும் மீனவர்கள் படகு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். 900 பேர் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் இறந்த 10 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. ஏனையயோர் கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *