புதுடில்லி:டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில், பல பயன்பாடுகளிலும் மூங்கில் பொருட்களை அதிகம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.டில்லியில் அடுத்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இதையொட்டி, மூங்கிலால் செய்யப்பட்ட டீ-ஷர்ட், டிராக்சூட் , தொப்பி, சீருடை ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூங்கில் திரைகள், பரிசு பொருட்கள், நினைவு பரிசுகள் போன்றவை காமன்வெல்த் விளையாட்டு நிகழ்ச்சியின் போது பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி டில்லியில் விரைவில் நடைபெற உள்ளது. நடைபெற உள்ள பேஷன் ஷோவில் மூங்கிலால் செய்யப்பட்ட ஆடைகள், செருப்புகள் ஆகியவற்றை அணிந்து மாடல் அழகிகள் பூனை நடை பழக உள்ளனர்.
இந்த கண்காட்சி மூலம் மூங்கில் பொருட்கள் காமன்வெல்த் நாடுகளில் பிரபலமாகும் வாய்ப்பு உள்ளது’ என, காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார்.
Leave a Reply