புதுடில்லி:விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு 7 சதவீத வட்டியில் குறுகியகால பயிர்க் கடன் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குறுகிய கால பயிர்க்கடனாக வழங்கப்படும், இந்த கடனுக்காக கடந்த ஆண்டு இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு மூன்று லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்படும் விவசாய கடன்களுக்கு 2 சதவீதம் வரை வட்டி மானியத்தை அரசு வழங்கி வருகிறது. இதை, மேலும் 1 சதவீதம் உயர்த்தவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதாவது வாங்கிய கடனை ஒழுங்காக செலுத்தும் விவசாயிகளுக்கு வெறும் 6 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். இந்த விவசாயக்கடன் வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு நாலாயிரம் கோடி ரூபாய் வரை கூடுதலாக செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply