வரும் 2012ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில், மருத்துவ சுற்றுலாத்துறையின் மதிப்பு 10,000 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறைக்கு எப்போதும் வீழ்ச்சி கிடையாது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவ சுற்றுலாவும் அதிகரித்து வருவதால், இந்த துறையில் நிபுணர்களுக்கான தேவை எப்போதும் உள்ளது. இதனால் டில்லியில் இருக்கும் இன்ஸ்டிடியூட் ஆப் கிளினிக்கல் ரிசர்ச், ‘ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்’ படிப்பில் எம்.பி.ஏ.,வை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இரண்டாண்டு படிப்பில், முதலாம் ஆண்டில் நிர்வாக திறன்கள், சுகாதார சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றுடன், மருத்துவ பதங்கள் மற்றும் நோய் வகைகள் குறித்து கற்றுத்தரப்படுகிறது. இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் மருத்துவ சுற்றுலா அல்லது ஹாஸ்பிடல் ஆபரேஷன் மேனேஜ்மென்ட் ஆகிய ஏதாவது ஒரு பிரிவை தேர்வு செய்யலாம்.
மருத்துவமனைகள், மருத்துவ கட்டுமான நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள், விமான நிறுவனங்களில் கூட இந்த துறை சார்ந்த நிபுணர்களுக்கான தேவை உள்ளது. இந்த துறையின் வேலைவாய்ப்பு வரும் ஆண்டுகளில் உயரவே வாய்ப்புள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த படிப்பை நிறைவு செய்தவர்கள் ஆலோசகர், மருத்துவ மேற்பார்வையாளர், ஹெல்த்கேர் எக்சிகியூட்டிவ், ஹாஸ்பிடல்
புராஜெக்ட் எக்சிகியூட்டிவ், சீப் மெடிக்கல் ஆபீசர், கன்சல்டன்ட் ஆகிய பொறுப்புகளில் பணியாற்ற முடியும். ஹாஸ்பிடல் ஆபரேஷன், ஹாஸ்பிடல் மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆகிய பிரிவுகளில் நிர்வாகியாகவும் பொறுப்பு வகிக்க முடியும். ஆசிரியராகவும் பணியாற்றலாம்.
படித்து முடித்தவுடன் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கிறது. அனுபவம் பெற்ற நிபுணர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த படிப்பில் சேர அறிவியல், பார்மசி, மருத்துவம் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் ஆண்டில் மருத்துவ சுற்றுலா படிப்பை தேர்வு செய்ய விரும்புபவர்கள் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.
Leave a Reply