புதுடில்லி: கைனடிக் ஹோண்டா நிறுவனத்தை விலைக்கு
வாங்கியுள்ள, மஹிந்தரா அண்ட் மஹிந்தரா நிறுவனம், புதிதாக இரண்டு கியர்லெஸ் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மஹிந்தரா நிறுவனம் ஏற்கனவே ஃபிளைடி என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இருந்தது. அதற்கு அடுத்த கட்டமாக தற்போது, ‘ துரோ மற்றும் ரோடியோ’ என இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கியர்லெஸ் ஸ்கூட்டர்களும், முந்தைய கைனடிக் மாடல்களை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. இதில் துரோ ஸ்கூட்டர், நோவா ஸ்கூட்டர் அடிப்படையிலும், ரோடியோ ஸ்கூட்டர், ஃபிளைடி ஸ்கூட்டர் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. துரோ ஸ்கூட்டரின் முன்பகுதியில் காரில் உள்ள சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சீட்டுக்கு அடியில் ஸ்டோரேஜ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் ரோடியோ ஸ்கூட்டரில் இடம் பெற்றுள்ளது. இதில் ரோடியோ ஸ்கூட்டரின் விலை ரூ.38 ஆயிரம்; துரோ ஸ்கூட்டரின் விலை ரூ.41 ஆயிரம்.
Leave a Reply