டோக்கியோ: எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னனியில் உள்ள பேனசோனிக் நிறுவனம் புதிதாக ரோபடிக் படுக்கை ஒன்றை அறிமுகம் செய்கிறது. இந்த ரோபடிக் படுக்கையை படுக்கை மற்றும் வீல் சேராக உபயோகிக்கலாம்.
இந்த ரோபடிக் படுக்கையை பொதுமக்களின் பார்வைக்காக, கண்காட்சி ஒன்றை ஏற்படுத்தி வருகிறது. இக்கண்காட்சி செப்.,29ம் தேதி துவங்கி அக்.,1ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் தனது விற்பனையை தற்போது துவங்க விருப்பமில்லை என்று அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து மேற்கொண்டு உற்பத்தி செய்யவும், 2015ம் ஆண்டில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
Leave a Reply