லக்னோ சிறுமிக்கு யோகம் : நியூயார்க் மாநாட்டில் பேசுகிறார்

posted in: உலகம் | 0

tbltopnews1_3754389287நியூயார்க் : காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நியூயார்க்கில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டில், லக்னோவைச் சேர்ந்த 13 வயது சிறுமி உரை நிகழ்த்துகிறார்.நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., பொதுச் சபையில் மாநாடு நடக்கிறது. ஐ.நா., சபை பொதுச் செயலர் பான்-கி-மூன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில், லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் யுக்ரத்னா ஸ்ரீவத்சவா என்ற மாணவி உரை நிகழ்த்துகிறார். உலகில் உள்ள 300 கோடி குழந்தைகளின் சார்பாக, இந்த மாணவி பேசுகிறார். இதுகுறித்து மாணவி யுக்ரத்னா கூறியதாவது:அமெரிக்காவின் தற்போதைய கொள்கைகள் எதிர்காலத்தில், அந்நாட்டை பாதிக்கும். இப்போதே அவர்கள் மாற்று நடவடிக்கை எடுத்தால், எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை, அதிபர் ஒபாமாவிடம் சொல்ல உள்ளேன்.நமது மூதாதையர்களிடம் இருந்து, நாம் சிறப்பான பூமியைப் பெற்றுள்ளோம். அந்த பசுமை நிறைந்த பூமியை நாம் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மாசு படுத்திக் கொண்டிருக்கிறோம். நமக்கு பின்னால் வரும் சந்ததிக்கு நாம் ஒரு மோசமான பூமியை தர உள்ளோம். அது சரியல்ல.மூன்று கோடி இளைஞர்களின் கருத்துக்களை உலக தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் எங்களை புறக்கணிக்க முடியாது. <இந்த பூமியை, பசுமை நிறைந்ததாக மாற்றத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.இவ்வாறு யுக்ரத்னா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *