வெள்ளை மாளிகையில் உயர் பதவியில் 9 இந்தியர்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒன்பது பேர், வெள்ளை மாளிகையில் பணியாற்றுவதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சிலர் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை அலுவலக வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்:அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தில், சமூக மாறுதல் மற்றும் மக்கள் பங்களிப்பு துறையில் துணை உதவியாளராக பணியாற்றும் சோனல் ஷா என்பவர், ஆண்டுக்கு 60 லட்ச ரூபாயும், சிறப்பு திட்டங்களின் இயக்குனர்களாக இருக்கும் ரச்சனா பவுமிக் மற்றும் ஆதித்ய குமார் இருவரும் ஆண்டுக்கு 49.5 லட்ச ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.ஒபாமா நிர்வாகத்தில் பணியாற்றும், அனிஷா தாஸ் குப்தா மற்றும் பிரதீப் ராமமூர்த்தி ஆகிய இருவரும், ஆண்டுக்கு 43.4 லட்ச ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.இன்டர்கவர்மென்டல் மற்றும் பப்ளிக் என்கேஜ்மென்ட் துறை கொள்கைகள் வகுக்கும் அலுவலகத்தின் இயக்குனராக இருக்கும் கவிதா படேல், ஆண்டுக்கு 32.5 லட்ச ரூபாயும், வெள்ளை மாளிகை கவுன்சிலின் சிறப்பு உதவியாளராக இருக்கும் ஷோமிக் தத்தா, ஆண்டுக்கு 31 லட்ச ரூபாயும் சம்பளம் பெறுகின்றனர்.வெள்ளை மாளிகை கொள்கைகள் வகுக்கும் துறை ஆலோசகர் மானசி தேஷ்பாண்டே ஆண்டுக்கு 27 லட்ச ரூபாயும், தாரா ரங்கராஜன் என்பவர் ஆண்டுக்கு 20 லட்ச ரூபாயும் சம்பளம் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *