எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் சுட்டமைப்பின் சார்பில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மூத்த சகோதரர் சமால் ராஜபக்ஷ ரத்தினபுரி மாவட்டத் தலைவராகவும் இளைய சகோதரர்களான பெசில் ராஜபக்ஷ கம்பஹா மாவட்டத் தலைவராகவும் கோதபாய ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத் தலைவராகவும் சமால் ராஜபக்ஷவின் புதல்வர் சசிந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத் தலைவராகவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத் தலைவராக ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவும் போட்டியிட உள்ளதாக பிரபல சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஏனைய பல மாவட்டங்களில் ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு நெருங்கியவர்களை தலைமைப் பொறுப்பில் நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை கட்சிக்குள் பல்வேறு உட்பூசல்களை ஏற்படுத்த வழிகோலும் என தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply