புதுடில்லி: புதிய பிரிமியம் வருவாய் ஈட்டுவதில் எஸ்.பீ.ஐ., லைப் நிறுவனத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., விஞ்சி உள்ளது. தனியார்ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்சியல் நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் ரூ. 1, 725 கோடியை புதிய பிரிமியம் வருவாயாக ஈட்டியுள்ளது.
மற்றொரு தனியார் நிறுவனமான எஸ்.பி.ஐ., லைப் இதே காலகட்டத்தில் 1704 கோடி புதிய பிரியம் வருவாய் பெற்றுள்ளது. சென்ற ஆகஸ்டு மாதத்தில் மட்டும் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய் ரூ.525 கோடியாக இருந்தது. இதன் காரணமாகவே, முதல் ஐந்து மாதங்களில் இந்நிறு வனத்தின் வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் எஸ்.பீ.ஐ. லைப் புதிய பிரிமியம் வாயிலாக ரூ.306 கோடி ஈட்டியுள்ளது. இருப்பினும், இதே காலகட்டத்தில், ஒட்டுமொத்த அளவில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 15 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Leave a Reply