மீண்டு’வந்த மதுரை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்

posted in: மற்றவை | 0

tbltopnews1_13742792607மதுரை : கடத்தப்பட்ட மதுரை மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன் நேற்று இரவு கடத்தல்காரர்களிடமிருந்து “மீண்டு’ வந்தார். முருகேசன் நேற்று காலை “வாக்கிங்’ சென்றபோது ஒரு வேனில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

இரவு 10.30 மணிக்கு திடீரென அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். போலீஸ் விசாரணையில்,” நான் “வாக்கிங்’ சென்ற பகுதியில் “டெம்போ டிராவல் வேன்’ நின்றது. அதிலிருந்த ஏழு பேர் என்னை துணியால் கண்களை கட்டி வேனிற்குள் தூக்கிப்போட்டனர். அவர்கள் யார் ? என தெரியவில்லை. வேன் எங்கே சென்றது எனத் தெரியாது. என்னை அவர்கள் தாக்கவில்லை; துன்புறுத்தவில்லை. என்னிடமிருந்த 2000 ரூபாய், மோதிரத்தை பறித்துக்கொண்டனர். இப்படியே இறங்கி ஓடிவிடு எனக்கூறி, செலவுக்கு பணம் கொடுத்து இறக்கிவிட்டனர்.

வேன் சென்றதும் கண்களிலிருந்த துணியை அகற்றிவிட்டு பார்த்தேன். அப்பகுதி மதுரை காமராஜ் பல்கலை மற்றும் நாகமலை புதுக்கோட்டைக்கு இடைப்பட்ட பகுதி எனத் தெரிந்தது. அப்போது இரவு 8.30 மணி இருக்கும். நாகமலையிலிருந்து பஸ்சில் ஏறி அரசரடி வந்தேன். அங்கிருந்து ஆட்டோவில் அண்ணாநகர் ஸ்டேஷனுக்கு வந்தேன், என்றார். பின் முருகேசன் நிருபர்களிடம் கூறுகையில்,”” நான் “வாக்கிங்’ சென்று திரும்புகையில் வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் என்னை கண்களை துணியால் கட்டி வேனில் கடத்தினர். எதற்கு கடத்தினர் எனத்தெரியாது. என்னை தொந்தரவு செய்யவில்லை. என் மீது அவர்கள் கை கூட படவில்லை. கோரிக்கை ( டிமாண்டு) எதுவும் வைக்கவில்லை. வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை,” என்றார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *