சண்டிகார்:அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான அலை வீசினாலும், எதிர்க்கட்சியின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா கலக்கம் அடைந்துள்ளார்.
அரியானாவில் கடந்த 2004ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 67 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்திய தேசிய லோக்தளம் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.,வுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன.சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி நடை தொடர்ந்தது. தற்போது அரியானா சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.,- இந்திய தேசிய லோக்தள கட்சி கூட்டணி முறிந்துள் ளது. இதனால், அந்த கட்சிகள் தனியாக தேர்தலை சந்திக்கின்றன.
லோக்சபா தேர்தல் வெற்றி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப் பட்ட திட்டங்கள், ஜாட் இன மக்களின் ஓட்டு வங்கி, எதிர்க் கட்சி கூட்டணி முறிவு என, தேர்தலில் காங்கிரசுக்கு சாதகமான விஷயங்கள் அதிகம் இருந்தாலும், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஒரு வித கலக்கத்தில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் தான் இதற்கு காரணம். இந்திய தேசிய லோக்தள கட்சி தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் தேர்தல் அறிக்கை இதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. அவரது தேர்தல் அறிக் கையில்,”தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு, வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை, அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இலவச ஸ்கூட்டர்’ என, கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.மேலும், கடந்த சட்டசபை தேர்தலை விட, சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங் கிரசின் ஓட்டு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், ஆளும் காங்கிரசுக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது, முதல்வர் பூபிந் தரை கவலை அடையச் செய்துள்ளது.இருந்தாலும், இதை அவர் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை. அவர் கூறுகையில், “இந்திய தேசிய லோக்தள கட்சியின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வாக் காளர்கள் நம்ப மாட் டார்கள். அவர்கள் இலவசமாக விமானம் தரப் போவதாக கூறினாலும், காங்கிரசுக்கு தான் மக்கள் ஓட்டளிப்பர்’ என, நம்பிக்கையுடன் கூறினார்.
Leave a Reply