ஆன்-லைன் மூலம் கல்விக்கடன் : அமைச்சர் சிதம்பரம் தகவல்

posted in: அரசியல் | 0

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத் தில் நடந்த கல்விக்கடன், குறைந்த வட்டியில் பொருளாதாரக்கடன் வழங்கும் விழாவில் உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஆன்-லைன் மூலம் கல்வி கடன் விண்ணப்பிக் கலாம் என தெரிவித்தார்.

விருதுநகர் வி.வி.வி., கல்லூரியில் நடந்த விழாவிற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் சிஜிதாமஸ் வரவேற்றார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைவர் எஸ்.எ.பட், எம்.பி.,க் கள் விருதுநகர் மாணிக்க தாகூர், தென்காசி லிங்கம், காஞ்சிபுரம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ.,ராமசாமி, மாவட்ட ஊராட்சி சேர்மன் கடற்கரைராஜ், விருதுநகர் ஊராட்சி சேர்மன் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், பாண்டியன் கிராம வங்கி இயக்குனர் பாலகிருஷ்ணசாமி, நகராட்சித் தலைவர் கார்த்திகா, இளைஞர் காங்., நிர்வாகி நவீன், முன்னோடி வங்கி மேலாளர் சுகுமாறன், டி.ஆர்.ஓ., கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் சிஜி தாமஸ்:

“விருதுநகர் மாவட்டத்தில் கல்விக்கடனும், குறைந்த வட்டியில் பொருளாதாரக்கடனும் ஒரே நாளில் தரப்படுகிறது. இதன் மூலம் 15 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் முதன் முதலாக இரு கடன்களும் ஒரே மேடையில் வழங்கியது இங்கு தான்’.

எம்.எல்.ஏ. ராமசாமி:

வங்கி கடன் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. எனது பரிந்துரை கடிதம் கல்விக்கடனுக்காக வழங்கினேன். ஆனால் வங்கி மேலாளர் மதிக்கவில்லை. எம்.பி., யின் பரிந்துரை கடிதம் வாங்கி கொடுத்தோம் எம்.பி.,யை வங்கி துவக்கி கல்விக்கடன் வழங்க வேண்டியது தானே என்கின்றனர். இன்று அமைச்சர் வந்ததால் பலருக்கு கடன் கிடைத்துள்ளது.

லிங்கம் எம்.பி.,:

கல்விக் கடன் என சென்றால் வங்கியின் நிதியை காப்பாற்றுபவர்கள் போல் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதில்லை. உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்க வங்கிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

மாணிக்கதாகூர் எம்.பி.,:

விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேரும், மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து 900 பேரும் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். பெரும்பான்மையோருக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. எனது அழைப்பிற்கிணங்கி அமைச்சர் வந்தார் கடனும் தந்தார்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:

“விருதுநகரில் ஏழை மக்கள் தான் அதிக அளவில் உள்ளனர். இவர்களுக்கு கல்விக்கடன் வழங் குவதன் மூலம் அவர்கள் உயர் கல்விக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்: ஒரு திட்டம் மக்களை சேர வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்பு முக்கியம். அனைத்து வங்கிகளுக்கும் ஆன் லைன் மூலம் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மனு சென்றவுடன் தலைமை அலுவலகத்திலிருந்து எந்த வங்கியை அணுக வேண் டும் என தெரிவிக்கப்படும். அதன் பின்னர் அந்த கிளைக்கு சென்று கடன் பெற்றுக்கொள்ளலாம். தூத்துக்குடி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

கல்வி அமைச்சர் “மிஸ்சிங்’ : * உள்துறை அமைச்சர் தனது பேச்சை முடித்து கொண்டு திரும்பும் போது மைக் ஸ்டாண்டில் போடப்பட்ட மேடை தட்டியதில் தவறி விழப்போனவர் தடுமாறி சமாளித்து கொண்டார்.
* கல்விக்கடன் வழங்கும் விழாவில் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ளவில்லை.
* கல்விக்கடன் தரவில்லை என செல்லத்துரை தீக்குளித்ததாக லிங்கம் எம்.பி தெரிவித்தார். சிகிச்சையில் உள்ள செல்லத்துரைக்கு அமைச்சர் சிதம்பரம் அஞ்சலி செலுத்துவதாக தவறுதலாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *