மும்பை: ஜப்பானை சேர்ந்த மிட்சுயி
ஓஎஸ்கே லைன்ஸ் நிறுவனத்துடன் சென்னையை சேர்ந்த சிகால் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, எண்ணூர் துறைமுகத்தில் ஆட்டோமோடிவ் யார்ட் பகுதியை இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக கையாள உள்ளன. ஓஎஸ்கே லைன்ஸ் நிறுவனத்தில் 45 சதவீதப் பங்குகளை சிகால் நிறுவனம் வைத்திருக்கும், எஞ்சிய பங்குகள் ஓஎஸ்கே லைன்ஸ் நிறுவனத்திடம் இருக்கும். இந்த கூட்டு நிறுவனம் அடுத்த நிதி ஆண்டில் இருந்து செயல்படம் என்று சிகால் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் முழுவதுமாக இயந்திரத்தால் கையாளப்படும் யார்டு பகுதியை நிறுவி அதனை பயன்படுத்தும் பணியை இவ்விரு நிறுவனங்களும் மேற்கொள்ள உள்ளன. மேலும், இதன் மூலம் ஆட்டோமொபைல் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பயனடைவார்கள் என்று சிகால் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Leave a Reply