மும்பை: பங்குச் சந்தையில் 13 ஆயிரத்து 957 கோடி ரூபாயை முதலீடு செய்ய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஷேர்கான் ஆய்வு நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட் பிரிவு ஆய்வாளர் ஷப்னா ஜவார் கூறும் போது, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களிடம் ரொக்கமாக ரூபாய் 13 ஆயிரத்து 957 கோடி இருப்பதாகவும், இதை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான தக்க தருணத்திற்காக காத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 957 கோடியில், ஏற்கனவே திரட்டிய தொகை ரூ. 13 ஆயிரத்து 045 கோடி ஆகும். புதிய யூனிட்டுகள் வெளியீட்டு மூலம் ரூ. 912 கோடி திரட்டப் பட்டுள்ளது.
Leave a Reply