ஹாங்காங் : பலமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை 300 கோடி ரூபாய்; என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை தான்.ஹாங்காங்கில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்று இப்படி விலை வைத்து விற்றுள்ளது. இது உலகளவில் சாதனையாக கருதப்படுகிறது.
இதுகுறித்து, கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஹெண்டர்சன் லாண்ட் என்பவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட பலமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீடு, அதிகளவாக 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில், சதுர அடிக்கான விலையே சாதனை விலையாக கருதப்படுகிறது. அந்த வீட்டை வாங்கியவர்கள் பெயரை தெரிவிக்க இயலாது. இந்த வீட்டில், இரண்டு அடுக்கு மாடி, ஐந்து படுக்கையறைகள், பெரிய நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் மற்றும் யோகா மையம் ஆகியவை அமைந்துள்ளது. ஏழாயிரம் சதுர அடி பரப்பில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஹெண்டர்சன் லாண்ட் கூறினார். ஹாங்காங்கில், கடந்த மாதம், உள்ளூர் தொழிலதிபர் ஒருவர், கவுலூன் அருகே, ஒரு படுக்கையறை கொண்ட 816 சதுர அடி வீடு ஒன்றை, 15 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார். ஹாங்காங்கில் வீடுகளுக்கான சதுர அடியின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இங்கு, கட்டடம் கட்டும் கட்டுமான நிறுவனத்தினர் தான், வீடுகளின் சதுர அடி விலையை அதிகமாக கூறுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
Leave a Reply