மதுரை: இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
மதுரையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் விவகாங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மிக உறுதியான பதிலடி தரப்படும்.
இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். மும்பை தாக்குதல்தான் பாகிஸ்தானின் கடைசி விளையாட்டாக இருக்க வேண்டும்.
எல்லை கடந்த தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறது. எங்களுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானுக்கு மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம்.
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இனி இந்தியாவில் தாக்குதல் நடத்தினால், அவர்கள் தோல்வியை மட்டும் சந்திக்க மாட்டார்கள், மாறாக உறுதியான, வலுவான பதிலடியையும் சந்திப்பார்கள் என்றார் ப.சிதம்பரம்.
Leave a Reply