சென்னை: இனி தமிழகம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஒரே விலை நிர்ணயிக்கப் படும் என்று தமிழக நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவந்துள்ள செய்தியில், தமிழகம் முழுவதும் இனி தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஒரே விலை நிர்ணயிக்கப் படுகிறது.
இதன் மூலம் மக்கள் ஏமாறுவது தடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. பொதுவான தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஊருக்கு ஊர் மாறுப்படும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி என ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விலையாக இருக்கும். இதனால் தங்கத்தை விற்கும் வியாபாரிகள், எங்கு விலை குறைவாக உள்ளதே அங்கு சென்று நகையை வாங்குவர். இதனால், அந்த இடத்தில் தங்கத்தின் விலை உயரும். இது மட்டுமல்லாமல், சில நகை கடைகளில் விலையை குறைப்பது போல குறைந்து சேதாரம், செய்கூலி என கூறிவிட்டு விலையை உயர்த்தி விட்டு, மக்களை ஏமாற்றுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, இனி தமிழகத்தில் எங்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினாலும் ஒரே விலை என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த விலை, சர்வதேச சந்தை நிலவரப்படி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஒரே சீரான விலையை சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களின் நகை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழு கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Leave a Reply