சிவகங்கை: தமிழை பாடமாக கொண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வில், தமிழை பாடமாக கொண்டு, முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் அரசு சார்பில் கவுரவிக்கப் படுகின்றனர். கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு, மெட்ரிக் வகுப்புக்கு முதல் பரிசு – 7,500 ரூபாய், இரண்டாம் பரிசு -6,000, மூன்றாம் பரிசு – 5,000, பிளஸ் 2 வகுப்புக்கு முதல் பரிசு -15 ஆயிரம், இரண்டாம் பரிசு – 12 ஆயிரம், மூன்றாம் பரிசு – 10 ஆயிரம் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு முதல், பரிசுத் தொகை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பில் முதல் பரிசு – 25 ஆயிரம், இரண்டாம் பரிசு- 20 ஆயிரம், மூன்றாம் பரிசு- 15 ஆயிரம், பிளஸ் 2 வகுப்பில், முதல் பரிசு 50 ஆயிரம், இரண்டாம் பரிசு- 30 ஆயிரம், மூன்றாம் பரிசு- 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என அரசு முதன்மை செயலர் குற்றாலிங்கம் தெரிவித்துள்ளார். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம் தமிழ் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும்’ என்றார்.
Leave a Reply