மும்பை: ஆசிய நாடுகளில் எரிசக்தி துறையில் முன்னிணியில் இருக்கும் முதல் 15 நிறுவனங்களில் ஐந்து இடங்களை இந்திய பிடித்துள்ளது. இதில் சீனா மூன்று நிறுவனங்களுடன் பின்னுக்கு தள்ளப் பட்டுள்ளது.
பிளாட்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 250 எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களை பட்டியலிட்டு தகவல் வெளியிட்டது. இதில், சர்வ்தேச பட்டியலில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த 55 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளதுள்ளன. இந் 55 நிறுவனங்களில் 9 இந்திய நிறுவனங்கள் உள்ளன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆயில் அன்ட் நேச்சுரல் காஸ் கார்ப்ரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், என்.டி.பி.சி., பாரத பெட்ரேலியம் கார்ப்ரேஷன் ஆகிய 5 இந்திய நிறுவனங்கள ஆசியாவின் முதல் 15 இடங்களுக்குள் உள்ளன
Leave a Reply