ஐ.எம்.இ.ஐ., என்றழைக்கப்படும் அடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவை, டிசம்பர் 1ம் தேதி நிறுத்தப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்து உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கோடிக்கணக்கில் மொபைல் போன்கள் செயலிழக்கும்.
இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்தின் புரட்சியால், தொலைத்தொடர்புத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தரைவழி கேபிள்கள் மூலம் இணைப்பு பெற்று, தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நிலை மாறி, ஒயர்லெஸ் போன்கள் வந்தன. அதன் தொடர்ச்சியாக அறிமுகமான மொபைல் போன்கள், இன்று அனைவரது கைகளிலும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.வளர்ச்சியின் காரணமாக நன்மைகள் இருந்தாலும், ஒருபுறம் ஆபத்துகளும் இருக்கின்றன. மொபைல் போன் தயாரிப்பில், இந்தியாவில் பல்வேறுநிறுவனங்கள் போட்டி போட்டு வந்தாலும், சீன தயாரிப்புகள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
மொபைல் போன்களை பொறுத்தவரை, சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (ஐ.எம்.இ.ஐ., – இன்டர்நேஷனல் மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி) முக்கியமாக உள்ளது. மொபைல் போன்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் இந்த “15′ இலக்க எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.இந்த ஐ.எம்.இ.ஐ., எண் இருந்தால் மட்டுமே, குறிப்பிட்ட அந்த போன் எங்கிருக்கிறது, போன் யாருடையது என்பதை கண்டறிய முடியும். போன் தொலைந்து போனாலும், இந்த எண் மூலம் கண்டுபிடிக்கமுடியும்.
இந்நிலையில், 2007ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய சீன மற்றும் கொரிய நாட்டு தயாரிப்புகளில் இந்த எண்கள் இல்லாமல் வந்தன. மற்ற மொபைல்போன்களின் விலையை விடமிகவும் குறைவாக இருந்ததால், பலரும் இந்த மொபைல் போன்களை விரும்பி வாங்கினர்.பயங்கரவாதச் செயல்களில்ஈடுபடுவோரும், இந்த மொபைல் போன்களை பயன்படுத்தத் துவங்கினர். இதனால், பல பிரச்னைகள் தலை தூக்கின. பல குற்றச் சம்பவங்களில், இம்மாதிரியான மொபைல் போன்களை குற்றவாளிகள் பயன்படுத்தியதால், போலீசின் பிடியில் இருந்து தப்பும் சூழல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்புத் துறை, ஐ.எம்.இ.ஐ., எண்கள் இல்லாத மொபைல் போன்களை பயன்படுத்த தடை கொண்டு வந்தது. இந்த வகையான மொபைல் போன்கள், நாடு முழுவதும் 8சதவீதம் அளவிற்கு புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுஉள்ளது.தொலைத்தொடர்புத் துறையின் அறிவிப்பால், ஐ.எம்.இ.ஐ., எண்கள் இல்லாத மொபைல் போன்களை வாங்கியவர்கள் கலக்கம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஐ.எம்.இ.ஐ., எண்களை போன்களில் பதிவு செய்யும் மையங்கள் துவக்கப் பட்டு, ஆங்காங்கே வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இந்திய செல்லுலார் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கத்தினர் (ஐ.சி.ஏ.,) கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஐ.எம்.இ.ஐ., எண் இல்லாத மொபைல் போன்களை தடை செய்வதற்கான கெடு, மார்ச் 31ல் இருந்து டிச., 1க்கு தொலைத்தொடர்புத் துறை மாற்றி அமைத்துள்ளது.ஐ.எம்.இ.ஐ., எண்கள் இல்லாத மொபைல் போன்கள், மூன்றுபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், மற்ற போன்களின் ஐ.எம்.இ.ஐ., எண்ணை திருடி பயன்படுத்தும் போன்களும் அடக்கம்.
இந்த மூன்றுபிரிவுகளிலும் உள்ள மொபைல் போன்களுக்கான சேவை, வரும் டிச., 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. இணைப்பு துண்டிக்கப் படும்.இது குறித்து தொலைத்தொடர்புத் துறை அறிவிப்பு, அடுத்த சில தினங்களில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்லி., கூட்டமும் இன்று முதல் நடைபெறுவதால், இப்பிரச்னை எழும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.ஆனால், இம்மாதிரி மொபைல் பயன்பாட்டிற்கு சரிப்படாதுஎன்று அரசு முடிவு செய்யும் பட்சத்தில், இம்மாதிரி மொபைல் போனை பயன்படுத்துவோர், இதை ஒதுக்கிவிட்டு, அங்கீகாரம் பெற்ற மொபைலை வாங்க வேண்டியதைத் தவிர வேறு வழி இருக்காது.
போலி ஐ.எம்.இ.ஐ., எண் பதிவு ஜோர் : சீன மற்றும் கொரியதயாரிப்பு மொபைல் போன்கள் வாங்கி பயன்படுத்துபவர்கள், சென்னையில் உள்ள ரிச்சி தெரு மற்றும் பர்மா பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது மொபைல்களுக்கு, “ஐ.எம்.இ.ஐ.,’ பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் ஐ.எம்.இ.ஐ., எண்களை, மொபைல் போன் சேவை அளிக்கும்நிறுவனங்கள் அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த எண்ணை பெற்றாலும், அது மொபைல் போனை பாதுகாக்க பயன் படாது. இதுகுறித்து, தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹசன்கூறியதாவது:தற்போது பல இடங்களில் மொபைல் போன்களுக்கு வழங்கப்படும் ஐ.எம்.இ.ஐ., எண்கள் உண்மையானவை அல்ல. அவற்றை மொபைல் சேவை நிறுவனங்கள்அங்கீகரிக்க வேண்டும். அதற்கான எந்த திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. முன்னணி நிறுவனங்களின் மொபைல் போன்களில் மட்டும் தான் சரியான எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. தற்போது சீன தயாரிப்பு போன்கள், எண்களுடன்வருகின்றன. அவற்றை மொபைல் போன் சேவை மையங்கள் அங்கீகரித்தால் மட்டுமே பயன்படுத்தமுடியும்.இவ்வாறு ஹசன் கூறினார்.
Leave a Reply