திருச்சி: ஐடி துறை வாய்ப்புகளை மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்களுக்கும் கிடைக்க வழி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசு.
ஐடி துறையில் தமிழக இளைஞர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்க, மாணவர் சந்திப்புகளை சமீபத்தில் நடத்தியது தமிழக அரசின் எல்காட் மற்றும் நாஸ்காம் அமைப்புகள்.
திருச்சியில் நடந்த இந்த சந்திப்பில் பங்கேற்ற தமிழக ஐடி அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, இதே போன்ற சந்திப்புகள், விரைவில் மதுரை உள்ளிட்ட நகர்களிலும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னணி ஐடி ஜாம்பவான் நிறுவனங்களான டிசிஎஸ், இன்போஸிஸ், விப்ரோ, காக்னிஸைன்ட், ஹெக்ஸாவேர், எச்சிஎல் உள்ளிட்ட 40 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்று, கிராமப்புற இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் ஏராளமிருப்பதை உறுதி செய்தனர்.
தமிழகம் முழுக்க (சென்னை தவிர்த்து) ஐடி நகரங்களை உருவாக்க, தமிழக அரசு செய்துவரும் முயற்சிகளையும், புதிய ஐடி நகரங்களை உருவாக்க இதுவரை செய்யப்பட்டுள்ள ரூ 560 கோடி முதலீடு குறித்தும் விளக்கினார் அமைச்சர் பூங்கோதை.
அடுத்து மதுரையில் தங்கள் நிறுவன கிளைகளை அமைக்க இரு பெரிய ஐடி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply