புதுடெல்லி : மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், துபாயில் ரூ.3,300 கோடி முதலீடு செய்திருப்பதாக போதை மருந்து கடத்தலுக்கு நிதியுதவி வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த போதை மருந்து புலனாய்வு அமைப்பு (டிஇஏ) கொடுத்த தகவலின் பேரில், நரேஷ் ஜெயின் என்பவரை போதைப் பொருள் தடுப்பு காவல் துறையினர் (என்சிபி) டெல்லியில் கைது செய்தனர். இதுகுறித்து டிஇஏ அதிகாரிகள் கூறுகையில், ÔÔதுபாயில் வசித்து வரும் இந்தியரான நரேஷ், துபாயில் ஹவாலா மோசடி குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2007ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள தனது மகனுக்கு திருமணம் நடைபெறுவதாகக் கூறி, பெயிலில் வந்துள்ளார்.
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் சார்பாக சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தும் கும்பலுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார். மேலும் இவருக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடனும் நெருங்கி தொடர்பு இருக்கிறதுÕÕ என தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது, ÔÔஎன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது. தாவுத் இப்ராகிம் துபாயில் உள்ள நிறுவனங்களில் சுமார் ரூ.3,300 கோடி முதலீடு செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுங்கள்ÕÕ என்றார் நரேஷ்.
Leave a Reply