சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனைக் கொல்வது அல்லது உயிருடன் பிடிப்பது ஆகிய ஏதாவது ஒன்றின் மூலமே அல்- காய்தாவை தோற்கடிக்க முடியும் என்று ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளுக்கான இராணுவ தளபதி ஸ்டேன்லி மிக்கிறிஸ்டல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்த அவர், பின்லேடன் உயிருடன் இருப்பது அல்-காய்தா இயக்கத்திற்கு தைரியமூட்டுவதாக உள்ளது என்று தாம் நம்புவதாக கூறினார்.
பின்லேடனை கொல்லாமலோ அல்லது உயிருடன் பிடிக்காமலோ அல்-காய்தாவை தோற்கடிக்க முடியாது என்று ஸ்டேன்லி மேலும் தெரிவித்தார்
Leave a Reply