பாட்னா : பீகாரில் ஊழல் பெருச் சாளிகளாக விளங்கும் அரசு அதிகாரிகளில் 300 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று ஊழல் கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஊழல் பெருச்சாளிகளான அரசு அதிகாரிகளை ஒழித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக் கிறார். அதன் பயனாக ஆண்டுதோறும் பீகாரில் ஊழல் கண்காணிப்புத் துறையின் அதிரடியான நடவடிக்கையில் பல அரசு அதிகாரிகள் சிக்கிக் கொள்கின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 596 கெஜட் அதிகாரம் உடைய அதிகாரிகள்; 632 சாதாரண அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதியப்பட்டது. இவர்களில் 2006ல் 76 பேர்; 2007ல் 131 பேர்; 2008ல் 97 பேர்; இந்த ஆண்டு நவம்பர் வரை 71 பேர் ஆக 375 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகின்றனர். இவர்களில் 300 பேர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் சேர்த்திருக்கின்றனர். இப்படி வெளிப்படையாக ஊழல் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப் பட் டாலும், அதிகாரிகள் அசரவில்லை. அவர்களின் ஊழல் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. கைது செய்யப் பட்ட இத்தனை பேர்களில் இருவர் மட்டுமே பதவியிலிருந்து நீக்கப் பட்டுள்ளனர். மற்றவர்கள் இன்னும் பதவியில் தான் இருக்கின்றனர். இது குறித்து ஊழல் கண்காணிப்புத் துறையினர் கூறுகையில், “அதிகாரிகளைப் பதவியிலிருந்து தூக்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது. கைது செய்வது; எப்.ஐ.ஆர்., பதிவு செய் வது; விசாரணை; குற்றப் பத்திரிகை தாக்கல்; வழக்குப் பதிவு செய்வது இதுதான் எங்களது கடமை’ என்று தெரிவித்தனர்.
Leave a Reply