வாஷிங்டன் : “காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்கா தலையிடாது. இந்த பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் இரு தரப்பு பேச்சுவார்த் தை மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என, அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள் ளது.
அமெரிக்க பொது விவகாரத்துறை இணை அமைச்சர் கிரவ்லி கூறியதாவது: காஷ்மீர் பிரச்னையின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இந்த பிரச்னையில், அமெரிக்கா தலையிடாது. இந்தியாவும், பாகிஸ்தானும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், காஷ்மீர் மக்களையும் பேச்சுவார்த்தையில் சேர்த் துக் கொள்ளலாம். இவ்வாறு கிரவ்லி கூறினார். “காஷ்மீர் பிரச்னையை தீர்க்க, அமெரிக்கா தலையிட வேண்டும். மத்தியஸ்தம் செய்ய வேண்டும்’ என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி சமீபத் தில் வேண்டுகோள் விடுத் திருந்தார். அந்த வேண்டுகோள் கிரவ்லியின் பதில் மூலம் நிராகரிக்கப்பட்டுள் ளது.
Leave a Reply