புதுடில்லி: குறிப்பிட்ட மாநிலங்களில் ஆன்-லைன் வர்த்தகம்
மூலம் கோதுமையை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வெளிச் சந்தையில் கோதுமை விலை குறைய வாய்ப்புள்ளது. டில்லியில் அக்டோபர் மாதம் 13 ரூபாய்க்கு விற்ற கோதுமை ஒரு கிலோ இப்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு அக்டோபரில் 15 ரூபாய்; இப்போது 18 ரூபாய்.
கோதுமை விளைச்சல் அதிகரிக்கும் போது, வெளிச் சந்தையில் விலை குறைய வேண்டும். ஆனால், நடைமுறையில் கோதுமையின் விலை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தரகர்கள் பெருமளவில் பதுக்கி வைத்துவிடுவதால் தேவை உள்ள காலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உச்சத்துக்கு எகிறி விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கும் லாபம் கிட்டுவதில்லை. மேலும், பணவீக்கம் குறைந்தபோதும் கோதுமையின் விலை மட்டும் குறையவில்லை. இதைத் தடுக்க சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் கோதுமையை ஆன்-லைன் மூலம் வெளிச் சந்தையில் விற்க அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் அமலாகப் போகும் இத்திட்டத்தால், வெளிச் சந்தையில் கோதுமை விலை சரிய வாய்ப்புள்ளது. டில்லி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் இந்த மாதம் ஆன்-லைன் வர்த்தகம் அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply