பேஸ் புக்” கில் தந்தையை கண்டுபிடித்த பிரிட்டிஷ் சிறுமி

posted in: உலகம் | 0

facebook_logoபிரிட்டனில் 14 வயது சிறுமி ஒருத்தி, சிறுவயதில் பிரிந்துபோன தனது தந்தையை இணைய தளத்தின் “பேஸ் புக்” மூலம் கண்டுபிடித்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

நம்புவதற்கு சற்று கடினமானதுதான் என்றாலும் சம்பவம் என்னவோ உண்மைதான்!

லண்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஜெஸ் பிராட்லி. இவளுக்கு சிறிய வயதாக இருக்கும்போதே இவளது தந்தை கெவின் ராபர்ட்ஸ்,மனைவி மற்றும் மகளைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஓரளவு விவரம் தெரியவந்த பிறகு பிராட்லி தனது தந்தையை தேடத் தொடங்கினாள். சுமார் 9 ஆண்டுகால தேடலுக்குப் பின்னர் பிராட்லி, “பேஸ் புக்” மூலம் தனது தந்தையை கண்டுபிடித்தே விட்டாள்.

தனது தந்தையின் முகத்தை “பேஸ் புக்” கில் இடம்பெற்ற அவரது புகைப்படத்தில் பார்த்துவிட்டு,”நீங்கள்தான் எனது தந்தையாக இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன்!” என ராபர்ட்டுக்கு பிராட்லி தகவல் அனுப்பினாள்.

அவளது தகவலையும், புகைப்படத்தையும் பார்த்துவிட்டு தனது மற்றும் தனது மனைவியின் ஜாடையில் பிராட்லி இருப்பதை பார்த்து அது உண்மைதான் என்பதை உறுதி செய்தார் ராபர்ட்.

அதன் பின்னர் இருவரும் தங்களது இருப்பிடம் குறித்த தகவலை பரஸ்பரம் பரிமாறி, ஒன்று சேர்ந்ததாக லண்டனிலிருந்து வெளியாகும் ‘டெய்லி ஸ்டார்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேப்போன்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மற்றொரு இளம் வயது பெண்ணும், “பேஸ் புக்” மூலம் தனது பெற்றோர் மற்றும் 15 சகோதர சகோதரிகளுடன் இணைந்ததாகவும் அந்த பத்திரிகைச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *