புதுடெல்லி: போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வரி விதிக்க டெல்லி அரசு பரிசீலனை செய்து வருகிறது.
டெல்லி சாலைகளில் செல்லும் மொத்த வாகனங்களில் கார்கள் மட்டுமே 30 சதவீத பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், தன்னார்வத் தொண்டரான மனுஷி, போக்குவரத்து நெரிசல் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, நீதிபதிகள் முரளிதர் மற்றும் ரவீந்தர் பட் ஆகியோர் அடங்கிய மூவர் குழு, நெரிசலை குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். ÔÔபோக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக,
ஒருவர் பெயரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார் பதிவு செய்யப்பட்டால், சாலை வரி, வாகன நிறுத்த கட்டணம் ஆகியவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்ÕÕ என அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாக போக்குவரத்துக் காவல் துறை உயர் அதிகாரி விகாஸ் பவா கோர்ட்டில் தெரிவித்தார். இதை பாராட்டிய நீதிமன்றம், இதை உடனடியாக செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அரசை கேட்டுக் கொண்டது.
Leave a Reply